Gold kani

Gold kani Gold kani

புதிய உச்சம்.. எகிறி அடிக்கும் தங்கம் விலை.. குறைய வாய்ப்பு இருக்கா.தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே வேகமாக அதிகரிக்கும்...
06/03/2024

புதிய உச்சம்.. எகிறி அடிக்கும் தங்கம் விலை.. குறைய வாய்ப்பு இருக்கா.

தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே வேகமாக அதிகரிக்கும் நிலையில், தங்கம் விலை ஏன் அதிகரிக்கிறது.. வரும் நாட்களில் அதன் விலை குறையுமா என்பது குறித்த ஒரு பார்வை..
கடந்த சில காலமாகவே தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தங்கம் விலை நேற்றைய தினம் முதல் முறையாக ஒரு கிராம் தங்கம் விலை ரூ.6 ஆயிரத்தைக் கடந்தது.. அதேபோல ஒரு சவரனுக்கு ரூ.48,000 கடந்தது.
தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே மிகப் பெரியளவில் அதிகரித்துள்ளது. ஜிஎஸ்டி, செய்கூலி எல்லாம் சேர்த்தால் இப்போதே ஒரு கிராம் தங்கம் அசால்டாக 6500 ரூபாயைத் தாண்டிவிடும். விரைவில் அமெரிக்க மத்திய வங்கி தனது வட்டி விகிதத்தைக் குறைக்கும் என நினைக்கிறார்கள். இதன் காரணமாகவே தங்கம் விலை அதிகரித்து வருகிறது.

ஆனால், என்னைப் பொறுத்தவரை இப்போதைக்கு அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தைக் குறைக்க மாட்டார்கள். எனவே, வரும் காலத்தில் தங்கம் விலை சற்று குறைந்தால் உடனே வாங்கிக்கொள்ளுங்கள். நான் ரூ.5800இல் இருக்கும் போதே சொன்னேன். அதைப் பலரும் கேட்கவில்லை. இப்போது அதைத் தாண்டிவிட்டது. எனவே, குறையும் போது வாங்குங்கள்"
அடுத்த 18 முதல் 24 மாதங்களில் தங்கம் விலை நிச்சயம் ஒரு கிராம் 7000 ரூபாயைத் தாண்டும்.
பொதுவாகத் தங்கம் விலை அதிகரிக்க பல்வேறு காரணங்கள் இருக்கிறது. உதாரணமாகப் பொருளாதாரம் நன்றாக இருந்தால் தங்கம் விலை பெரிதாக உயராது. அதேநேரம் பொருளாதாரத்தில் எதாவது பிரச்சினை வந்தால் உடனே தங்கம் விலை அதிகரிக்கும். அதேபோல உலகில் எதாவது போர் உள்ளிட்ட பொருளாதாரத்தைப் பாதிக்கும் விஷயம் நடந்தாலும் தங்கம் விலை அதிகரிக்கும்.
அதாவது பாதுகாப்பான முதலீடாகத் தங்கத்தைக் கருதுவதால் பலரும் தங்கத்தில் முதலீடு செய்வார்கள். கொரோனா காலத்தில் தங்கம் விலை திடீரென எந்தளவுக்கு அதிகரித்தது என்பது அனைவருக்கும் தெரியும். அதேபோல ரஷ்யா உக்ரைன் போர், இஸ்ரேல் ஹமாஸ் போர் ஆரம்பித்த போதும் தங்கம் விலை அதிகரித்தது. இது தவிரத் தங்கம் விலை அதிகரிக்க அமெரிக்க மத்திய வங்கியும் ஒரு முக்கிய காரணம்.

அமெரிக்க மத்திய வங்கி இத்தனை காலம் வட்டி விகிதத்தை உயர்த்திய நிலையில், தங்கம் விலை சுற்று குறைந்தது. ஆனால், இப்போது அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தைக் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது அமெரிக்க மத்திய வங்கி தனது ஜூலை மாதம் கூட்டத்தில் வட்டி விகிதத்தைக் குறைக்கலாம் என மார்கெட் நம்புகிறது. இதன் காரணமாகவே தங்கம் விலை அதிகரிக்கிறது. இருப்பினும், அந்தக் கூட்டத்தில் வட்டி விகிதம் குறைய வாய்ப்பு குறைவு என்றே வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள்.
ஆனால், இப்போது அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தைக் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது அமெரிக்க மத்திய வங்கி தனது ஜூலை மாதம் கூட்டத்தில் வட்டி விகிதத்தைக் குறைக்கலாம் என மார்கெட் நம்புகிறது. இதன் காரணமாகவே தங்கம் விலை அதிகரிக்கிறது. இருப்பினும், அந்தக் கூட்டத்தில் வட்டி விகிதம் குறைய வாய்ப்பு குறைவு என்றே வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள்.

[24/02, 10:37 pm] skm samuthiram: இன்றைய தலைமுறையினர் பணத்தை முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அப்படிச் செய்ய...
24/02/2024

[24/02, 10:37 pm] skm samuthiram:
இன்றைய தலைமுறையினர் பணத்தை முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அப்படிச் செய்யும் முதலீட்டில் நஷ்டம் வந்துவிடாத வகையில் ஒவ்வொரு ஆண்டும் விலையில் ஏற்றம் கண்டு வரும் தங்கத்தில் முதலீடு செய்கிறார்கள். அவ்வாறு வாங்கக்கூடிய தங்க நகைகள் தரமானவையா என்பதை அறியும் சில வழிமுறைகளை பற்றி இப்போது பார்ப்போம்.

தங்கம் வாங்கும் போதெல்லாம் ஹால்மார்க் இடம் பெற்றிருக்கிறதா என்று பார்க்க வேண்டும் என்று கூறப்படுகிறது. இந்த ஹால்மார்க் ஆனது தங்கத்தின் தூய்மையை உறுதி செய்வது மட்டுமல்லாமல், எதிர்காலத்தில் விற்கப்பட்டால் சிறந்த மறுவிற்பனை மதிப்பையும் பெற உதவுகிறது.

கலப்படமற்ற தங்கத்தை விற்பனை செய்வதற்காக 800 ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டனில் அறிமுகப்படுத்தப்பட்டது தான் இந்த ஹால்மார்க். அன்றைய நகை வியாபாரிகள் தங்கத்துடன் சில உலோகங்களை எந்த அளவு சேர்கிறார்கள் என்பதை எல்லோருக்கும் தெரியும்படி ஒரு ஹாலில் வைத்து நகை செய்தனர். அவ்வாறு ஹாலில் தங்க நகைகள் செய்து பின்னர் வியாபாரம் செய்ததால் இதற்கு ஹால்மார்க் என்று பெயர் வந்தது.
இந்தியாவை பொருத்தவரை இந்திய தர நிர்ணய அமைப்பு (Bureau of Indian Standards) தான் தங்கத்தின் தரநிலைகளுக்கான சான்றிதழை அளிக்கிறது. இந்த அமைப்பு தான் ஹால்மார்க் சோதனையை செய்கிறது. ஹால்மார்க்கிங் ஆனது நுகர்வோருக்கு அவர்கள் வாங்கிய தங்கத்தின் தூய்மை குறித்து ஒரு உத்தரவாதத்தை அளிக்கிறது.

இந்த 3 இலக்க எண்களான 916, 750, 585 மூலம் தங்கத்தின் தூய்மையை அறியலாம். 22K916 (91.6% தூய்மை கொண்டது), 18K750 (75% தூய்மை கொண்டது), 14K585 (58.5% தூய்மை கொண்டது).
இதில் 22 காரட் தங்கம் என்பதே 916 தங்கம் ஆகும். இதில் 91.6% தூய தங்கம் இருக்கும். இந்த 22 காரட் தூய தங்கத்துடன், 2 காரட் செம்பு, வெள்ளி போன்ற உலோகக் கலவை சேர்க்கப்பட்டிருக்கும். 19, 18, 17 என காரட் குறைய குறைய நகையில் தங்கத்தின் அளவு குறைந்து, மற்ற உலோகத்தின் அளவு அதிகமாகும். இவ்வாறு தான் நகையின் தரம் கணக்கிடப்படுகிறது.

1921ல் வெறும் 21 ரூபாயாக இருந்த தங்கத்தின் (1 பவுன்) விலை, 2024ல் 48,000 ரூபாய்க்கு மேல் விற்கப்படுகிறது. மக்கள் தங்கத்தின் மீதுள்ள கொண்டுள்ள மோகம் தான் இந்த விலையேற்றத்திற்கு காரணம் ஆகும்.

கலப்படமில்லாத தூய தங்கமானது 24K/24 காரட் ஆகும். இந்த தூய தங்கத்தை பயன்படுத்தி நகைகள் செய்தால் எளிதில் உடைந்து விடும். எனவே நகை செய்யும்போது உடையாமல் இருக்க மற்ற உலோகங்கள் கலக்கப்படுகின்றன. அவ்வாறு சேர்க்கப்படும் உலோகக்கலவையின் அளவை பொறுத்து தான் ஹால்மார்க் (HALLMARK) வழங்கப்படுகிறது.

ஆட்டம் காட்ட போகுது தங்கம் விலை.. இனி இப்படி ஒரு சான்ஸ் கிடைக்காது.. கடந்த சில நாட்களாகவே தங்கம் விலையில் பெரியளவில் ஏற்...
24/02/2024

ஆட்டம் காட்ட போகுது தங்கம் விலை.. இனி இப்படி ஒரு சான்ஸ் கிடைக்காது..
கடந்த சில நாட்களாகவே தங்கம் விலையில் பெரியளவில் ஏற்ற இறக்கங்கள் இல்லாமல் இருக்கும் நிலையில், வரும் காலத்தில் தங்கம் விலை எப்படி இருக்கும்

"தங்கம்.." நமது நாட்டில் சேமிப்பு என்று வரும் போது இதுதான் மிகவும் முக்கியமான சொல்லாக இருக்கிறது. ஏழை மக்களும் நடுத்தர வர்க்கத்தினரும் தங்கள் சேமிப்பை எப்போதும் தங்கத்தில் தான் மேற்கொள்வார்கள்.

தங்கத்தை நாம் எமோஷ்னலாக பார்ப்பதே இதற்குக் காரணம். அதேநேரம் இது நமக்கு நல்லதும் செய்துள்ளது. ஏனென்றால் நீண்ட கால நோக்கில் பார்க்கும் போது தங்கத்தைப் போல ரிஸ்க் இல்லாத முதலீடு வேறு எதிலும் கிடைத்ததே இல்லை.

தங்கம்: மேலும் கடந்த காலங்களின் டேட்டாவை எடுத்துப் பார்த்தாலும் நமக்கு ஒரு விஷயம் மிகவும் தெள்ள தெளிவாகவே தெரியும். அதாவது நீண்ட கால நோக்கில் நாம் பார்க்கும் போது தங்கம் விலை எப்போதும் குறைந்ததே இல்லை. தொடர்ந்து அதிகரித்தே வந்துள்ளது. அதிலும் குறிப்பாக போர் அல்லது பெருந்தொற்று போன்ற பேரழிவு ஏற்படும் சமயங்களில் தங்கம் விலை பட்டென எகிறியிருக்கிறது.
கொரோனா காலத்தில் தங்கம் விலை சட்டென எகிறியது அனைவருக்கும் ஞாபகம் இருக்கலாம். கொரோனாவுக்கு முன்பு சுமார் ரூ. 4000 என்ற ரேஞ்சில் இருந்த தங்கம் அதன் பிறகு சர்ரென எகிறி உச்சம் தொட்டது. அதன் பிறகு இப்போது தான் கடந்த சில காலமாகத் தங்கம் விலை ஓரளவுக்கு நிலையாக இருக்கிறது. இதற்கிடையே தங்கம் விலை இப்போது எப்படி இருக்கிறது. வரும் காலத்தில் தங்கம் விலை எப்படி இருக்கும் என்பது குறித்த செய்தி..

"தங்கம் வாங்க இதை விடச் சிறந்த வாய்ப்பு கிடைக்காது.. தங்கம் வாங்க வேண்டும் என நினைப்போர் இப்போது வாங்கினால் சரியாக இருக்கும். விலை இறங்க இறங்கக் கூடுதலாகத் தங்கத்தை வாங்குகள். அடுத்த 15 மாதங்களில் ஒரு கிராம் தங்கம் 7000 ரூபாய் முதல் 7500 ரூபாய் வரை நிச்சயம் செல்லும்.

தங்கம் விலை லேசாக ஏறவும் இறங்கவும் செய்யும். ஆனால், பெரியளவில் விலையில் மாற்றம் இருக்காது. எப்போது அமெரிக்க மத்திய வங்கி தனது வட்டி விகிதத்தைக் குறைக்கிறதோ அப்போது தங்கம் விலை எகிற ஆரம்பிக்கும். அதன் பிறகே தங்கம் விலையில் உண்மையான ஏற்றம் இருக்கும்".

Address

1387
Rajapalayam
626117

Website

Alerts

Be the first to know and let us send you an email when Gold kani posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share