Arase Metal & Impon Jewels

Arase Metal & Impon Jewels Arase 5metals & Impon (Five metals)Jewels manufacturing

13/02/2026

Impon pocket vell 9655595222 // 9940802110

*இன்று வ.உ.சி. நினைவு தினம்**கப்பலோட்டிய தமிழன்,  செக்கிழுத்த செம்மல், தென்னாட்டு திலகர்  என்று போற்றப்பட்டவர் வ.உ.சிதம்...
18/11/2025

*இன்று வ.உ.சி. நினைவு தினம்*

*கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல், தென்னாட்டு திலகர் என்று போற்றப்பட்டவர் வ.உ.சிதம்பரனார். வந்தே மாதரம் என்று முழங்கி வெள்ளையரை வெகுண்டோடப் செய்த தேச பக்தர். அவர் பிறந்த ஒட்டப்பிடாரம் என்ற ஊரின் பெயரை உச்சரித்தாலே நாடி நரம்புகளின் வீரம் பாய்ந்தோடும். சிறைவாசத்தின் போது அவர் மாடுபோல் நடத்தப்பட்டு அவர் இழுத்த செக்கு இன்னும் கோவை சிறையில் வ.உ.சி.யின் வரலாற்றை பறைசாற்றிக் கொண்டிருக்கிறது.*

*வ.உ.சி. நெல்லை மாவட்டம் ஒட்டப்பிடாரத்தில் 1872–ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5–ம் தேதி புகழ்பெற்ற வழக்கறிஞர் உலகநாத பிள்ளைக்கும், பரமாயி அம்மையாருக்கும் மகனாப் பிறந்தார். ஒட்டப்பிடாரம் மற்றும் நெல்லை பள்ளியில் பயின்று வட்டாட்சியர் அலுவலகத்தில் எழுத்தராக பணியாற்றினார். பின்பு தந்தையைப் போலவே வழக்கறிஞர் ஆனார். எனினும் ஏழைகளுக்காகவே வாதாடினார்.*


*வ.உ.சி. என்றாலே நினைவுக்கு வருவது வெள்ளையருக்கு எதிராக சுதேசி கப்பல் கம்பெனி நடத்தியதுதான்.*

*சிறையில் சுண்ணாம்பு கலவையில் ஊற வைக்கப்பட்ட ஆட்டுத் தோல்களை வெறும் கைகளால் சுத்தப்படுத்தும் கொடுமையான வேலை அவருக்கு அளிக்கப்பட்டது.* *திடகாத்திரமான அவரது உடல் தொழுநோய் கண்டு உருக்குலைந்தது.*

*பாரதியார், சுப்பிரமணிய சிவா ஆகியோருடன் இணைந்து போராட்ட களத்தில் வ.உ.சி. ஆவேசமாக ஈடுபட்டார்.*

*நெல்லை சீமையில் செல்வச் செழிப்போடு வாழ்க்கையைத் தொடங்கிய கப்பலோட்டிய தமிழனின் கடைசி காலம் பெரும் வறுமையில் முடிந்ததுதான் கொடுமை. வ.உ.சி.யின் உடல் நிலை மிகவும் குன்றி 1936ம் ஆண்டு நவம்பர் மாதம் 18ம் நாள் ‘சுதந்திரமே எங்கள் உயிர் மூச்சு’ என்று தொடர்ந்து போராடிய அவரின் மூச்சு நின்று விட்டது.*


*தேசத்தையும், தமிழையும் இரு கண்களாகப் போற்றி தன் வாழ்க்கையை நாட்டுக்கே அர்ப்பணித்து மறைந்த வ.உ.சி.யின் புகழ் எந்நாலும் மறையாது.*

Address

Town Hall

Alerts

Be the first to know and let us send you an email when Arase Metal & Impon Jewels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share