16/10/2022
*16th Junior State Level ATYA PATYA Championship 2022 - 2023.*
( Recognized by Ministry of Youth Affairs and Sports. Govt. of India. )
கிளியாந்தட்டு என்று முன்பு அழைக்கப்பட்ட ஒரு விளையாட்டு தான் தமிழகத்திலிருந்து, வடநாட்டுக்கு சென்று மகாராஷ்டிராவை தலைமை இடமாக கொண்டு,
அட்யா- பட்யா
என்று பெயர் மாற்றம் பெற்று, இன்று உலகம் முழுவதும் விளையாடப்பட்டு வருகிறது. இது
இந்திய அரசின் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்டு, தற்போது மிகவும் பிரபலமாக வலம் வந்து கொண்டிருக்கும் ஒரு விளையாட்டு ஆகும்.
16ஆவது மாநில அளவிலான சேம்பியன்ஷிப் போட்டிகள், அக்டோபர் 7 முதல் 9 ஆம் தேதி வரை, திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூரில் நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் இருந்து பல்வேறு அணிகள் பங்கு பெற்றன.
குமரி மாவட்டத்தில் இருந்து பங்கு பெற்ற பெண்கள் அணி, மூன்றாவது இடத்தைப் பிடித்து, வெண்கல பதக்கம் பெற்றது.
வெற்றி பெற்ற வீராங்கனைகளை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலகர் திரு. ராஜேஷ், BA,Mped,NIS,
கன்னியாகுமரி மாவட்ட அட்யா-பட்யா அசோசியேஷன் தலைவர் -
திரு.J. அர்னால்டு அரசு,
செயலாளர் - திரு. எம். ஜெயராஜ்,
பொருளாளர் - திரு. K. அசோக்குமார், தலைமை பயிற்சியாளர் - திரு. A. ராம நாகராஜன் ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமாக விளையாடப்பட்டு வரும் இந்த
விளையாட்டில் பங்கு பெற்று வெற்றி பெறும் மாணவர்களுக்கு, கல்லூரி மேற்படிப்புகள் உட்பட மத்திய அரசுத்துறை வேலைவாய்ப்பிலும் இட ஒதுக்கீடு வழங்கியிருப்பது ஒரு சிறப்பம்சமாகும். இந்த விளையாட்டினை பயிற்சி பெற ஆர்வம் உள்ளவர்கள் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.